கோவில் வாசலில் துவாரபாலர் இருவர் இருப்பதை நாம் காணமுடியும். “துவாரா” என்ற சொல் “வாயில்” என்றும், பால என்பது “காப்போன்” என்றும் பொருள்படும். கோவில்களில், துவாரபாலர் படிமங்கள் தல புராணத்தின் பின்னணியில் வைக்கப்பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக துவாரபாலர்கள் கோவில் வாயில்களின் இருபுறங்களிலும் காணப்படும் வாயிற்காப்போர் உருவங்கள். சிவன் கோவில்களில் திரிசூலநாதர் – மழுவுடையார், சண்டி – முண்டி, உய்யக்கொண்டார் – ஆட்கொண்டார், சண்டன் – பிரசண்டன், பிரம்மா – திருமால் ஆகிய துவாரபாலர்கள் காணமுடியும். வைணவ கோவில்களில் “ஜயன், விஜயன்” என்கின்ற துவாரபாலர்கள் காணமுடியும்.
இடம்: ஜலநாதீசுவரர் கோவில், தக்கோலம்.





Sri Jalantheeswarar Temple at Thakkolam






YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/