சாஸ்த்ரா & சித்திரம் பேசுதடா குழுமம் இணைந்து நடத்திய காஞ்சிக்கோயில்களை நோக்கி ஒரு பயணம் இனிதே நடந்தேறியது!
கோயில்களின் நகரமாம் காஞ்சியிலே, கோயில் வடிவமைப்பில் பல விந்தைகள் நிகழ்த்திய பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான பழமையான கோயில்களை நோக்கி இந்த பயணம் 29 ஜனவரி 2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.
இந்த பயணத்தில் மொத்தமாக 8 கோயில்கள் பார்க்கப்பட்டது.
- இறாவதீஸ்வரம்
- பிறாவதீஸ்வரம்
- ஐராவதீஸ்வரம்
- முக்தேஸ்வரம்
- மதங்கேஸ்வரம்
- ஜுரஹரேஸ்வரம்
- சொக்கீஸ்வரம்
- மத்த விலாச பிரகஸன சிற்பம்
இளையவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில் காலை 5 மணிக்கு முன்பாகவே வந்தடைந்து எங்களை பிரமிப்பில் ஆழ்த்தினார் பலர். இரண்டு வாகனத்தோடு சுமார் 5 மணிக்கு தொடங்கிய இந்த பயணம் திட்டமிட்டது போன்று நகரத்தொடங்கியது. அதற்கு திரிஷ்டி பொட்டு வைத்தது போன்று ஒரு சம்பவம், அதனால் ஒரு வாகனம் ஒரு மணி நேரம் தாமதமாக திட்டமிட்ட இடத்திற்கு வந்தடைந்தது.
அந்த ஒரு மணி நேரம் வீணடிக்காமல், முதல் வாகனத்தில் வந்தவர்களை வைத்து திரு. பாபு மனோ அவர்கள் இறாவதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று விவரிக்க தொடங்கினார். அதற்குள் இரண்டாவது வாகனம் வந்து சேர்ந்தது, நானும் வந்தைடைந்தேன்.
மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, பல்லவ மன்னரால் காஞ்சியில் முதலில் கட்டப்பெற்ற பிறாவதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று இறைவனின் தரிசனத்தோடு, கோவிலின் வரலாறு, கட்டிட கலை, சிற்பக்கலை போன்றவை விவரிக்கப்பட்டது.
அடுத்ததாக ஐராவதீஸ்வரர் கோயிலில் ஒரு சிறப்பான நிகழ்வு.
சுட சுட பொங்கலோடு, காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. “வட போச்சே” என்ற சொல்லலாடல் ஏற்றார் போன்று, சுட சுட மெது வடை பரிமாற மறந்துவிட்டோம். சிற்றுண்டி முடிந்தவுடன் ஐராவதீஸ்வரர் கோயில் பற்றி விவரிக்கப்பட்டது.
இதன் பின்பு, முக்தேஸ்வரம் கோயிலுக்கு சென்று பிறகு மதங்கேஸ்வரம் கோயிலுக்கும் சென்று இந்த இரண்டு கோயிலுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி விவரித்தோம். இரண்டு கோயில்களையும் பார்த்து மக்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர். “அட இப்பத்தான்பா இந்த கோயிலுக்கு கூட்டிகிட்டு வந்தீங்க, யார ஏமாத்துறீங்க” என்ற கிண்டலடிக்கும் வகையில் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர்.
அடுத்ததாக என்ன ரெஸ்டு தான் . மத்திய உணவிற்காக ஜுரஹரேஸ்வரர் கோயிலில் அனைவரும் சற்று இளைப்பாறிய பின்பு, வட பாயசத்தோடு உணவு பரிமாறப்பட்டது. “என்ன என்ன ஐட்டங்களோ இந்த வரலாற்று பயணத்திலே” என்று எங்களை வந்தவர்கள் பாட்டு பாடி குஷி படுத்தினர். அஹா, ஓஹோ, அருமை, அருமை, அந்த ரசத்தை கொஞ்சம் ஊத்து மேன் என்று கூறியபடியே மத்திய உணவு பரிமாறப்பட்டது.
அப்புறம் என்ன, மக்கள் again ரெஸ்டு. சற்று நேரத்திற்கு பிறகு ஜுரஹரேஸ்வரர் கோயிலின் பிரமாண்டத்தையும், வரலாறும் ஒன்று சேர கூறி திரு பாபு மனோ அவர்கள் மக்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தார். அது போக தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலில் உள்ள மத்த விலாச பிரகசன சிற்பத்தின் வரலாறை பற்றி ஜுரஹரேஸ்வரர் கோயிலில் கூறி, பின்பு தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று ஒவ்வொன்றாக விளக்கினார்.
பின்பு காஞ்சி மத்தியில் சோழ மன்னர்களால் கட்டப்பெற்ற சொக்கிஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். அங்கு மராமரத்து பணி நடைபெறுவதால், கோயிலின் சிறப்பையும், அங்கே காணப்படும் சிற்பங்களின் சிறப்பினையும் விவரிக்கப்பட்டது.
இறுதியாக திரும்பவும் பிறாவதீஸ்வரர் கோயிலுக்கு சென்று, கோயிலின் வரலாறும், பல்லவ மன்னனின் கைவண்ணத்தில் கட்டப்பெற்ற இந்த கோயிலின் சிறப்பு மிக்க சிற்பத்தினை பார்த்தும் மக்கள் பிரமித்தனர். எல்லாம் முடிந்த பிறகு, மக்களிடம் நன்றி கூறி திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடியற்காலை 2:15 மணிக்கு தொடங்கிய என் பயணம் இரவு 9:30 மணிக்கு முடிந்தது. சற்று நேரம் கூட ஓய்வெடுக்காமல் நகர்ந்த இந்த பயணம், என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாக மாறியது. எங்கோ ஓரமாக சுற்றி கொண்டிருந்த என்னையும் வைத்து ஒரு குழு உருவாக்கி வரலாற்று தடத்தில் சாதிக்க முடியும் என்று கூற இந்த வரலாற்று பயணமே சான்று. இதற்கு எனக்கு ஆணிவேராக, உற்ற நண்பனாக, எனது வரலாற்று குருவாக இருக்கும் திரு. பாபு மனோ அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றி. இந்த மரபு நடை பயணத்தில் பங்குகொண்ட மக்கள் அனைவருக்கும் எனது மிக பெரிய நன்றி.
Special Thanks to:
Shri. Kalimuthu.M (Superintending Archaeologist)
Smt. Akalya. K (Junior Conservation Assistant – Kanchipuram)
Thiru. Narayanan, Thiru. Robert and Kanchipuram Sub-Circle Arch Department
Vels, Parthipan, Chandru & Devakumar
Team Sastra & Chithiram Pesuthada
அடுத்து பயணமாக “தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள்” என்ற தலைப்பில் உங்களை மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளோம். அனைவருக்கும் மிக்க நன்றி
Kanchipuram Temple – Heritage Walk
Kanchipuram
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
With a deep-rooted commitment to create awareness and to appreciate and celebrate the art and history of our historical sites, Team Shastra & Chithiram Pesuthada conducted a heritage walk for a group of history enthusiasts on January 29, 2023.
This heritage walk aims to create awareness about the importance of historical monuments for our culture and encourage people to protect and help in preserving these monuments for future generations. The heritage walk will include a group of 55 members led by our volunteer group from Shastra & Chithiram Pesuthada. We covered the following ancient monuments in and around Kanchipuram.
- Piravadeeswarar Temple | Piravasthanam
- Iravatheeswarar Temple | Iravasthanam | Mrityunja Eswarar Temple
- Airavateswarar Temple
- Jurahareswarar Temple | Jwarahareswarar Temple
- Mathangeeswarar Temple | Madangeeswarar Temple | Mathangeswara Temple
- Muktesvara Temple | Mukteswara Temple
- Kowsikeswarar temple | Chokkeeswarar Temple
- Mattavilasa Prahasana Sculptures, Thanthondreeswarar Temple
Soon we will meet you all with another trip titled as “தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள்“, Spread your Support.