மகனுக்கு தாய் கட்டிய கந்தழீஸ்வரர் கோவில்!

kandaleeswarar

சோழ சாம்ராஜ்யத்தின் ராஜமாதா என்று அழைக்கப்பெற்ற “செம்பியன் மாதேவியால்” தன் மகன் உத்தமசோழனின் நினைவாக கட்டப்பட்ட “உத்தமசோழீஸ்வரம்” என அழைக்கப்படும் “கந்தலீஸ்வரர் / கந்தழீஸ்வரர்” கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது.

விசாலமான இடத்தின் மையத்தில் தரைமட்டத்தை விட குறைந்தது 3அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமைந்த இக்கற்றளி தற்பொழுது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் கட்டுமான அமைப்பு கருவறை, அர்த்தமண்டபம், அந்தராளம், முக மண்டபத்துடன் கட்டப்பெற்றுள்ளது. அதுபோக கருவறை பகுதி பிரஸ்தரம் வரையில் கருங்கல்லாலும் அதன் மேல் உள்ள விமானப்பகுதி வேசர விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பெற்றுள்ளது. வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் பிரமாண்டமாய் வடிக்கப்பட்டு உள்ளது. இது சோழர்கால கட்டிடக்கலைக்கு சான்றாங்க உள்ளது.

Kanthalingeswara temple | Kanthaleeswarar
Kanthalingeswara temple | Kanthaleeswarar

இக்கோவில் பராமரிப்பிற்கு, பொன்னும், பொருளும், நிலமும் கொடுப்பட்டதாக ராஜராஜ சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இன்று கந்தழீஸ்வரம் என வழங்கப்படும் கோவில், கல்வெட்டுகளில் உத்தம சோழ ஈஸ்வரம் எனக் குறிப்பிடப்படுகிறது.

கட்டுமான வளர்ச்சியில் காலத்திற்கேற்ப புது புது யுத்திகளை கையாண்டனர் நம் முன்னோர்கள் செங்கல், மரம், சுதை மற்றும் உலோகங்கொண்டு கோவில் கட்டிய காலம்போய், குடவரை கோவில்கள் கட்டப்பெற்றது. அதற்கும் ஒரு படி மேல் சென்று கற்களை அடுக்கி கட்டினார்கள்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்து மகனுக்காக ஒரு தாய் எழுப்பிய கோவிலானது, இன்றும் நம் கண்முன்னே கம்பீரமாக நிற்கின்றது. நேரம் கிடைத்தால் நேரில் சென்று காணுங்கள்!

உத்தமசோழீஸ்வரம் | கந்தழீஸ்வரம்

Kanthalingeswarar Temple

Kanthalingeswarar Temple | Kanthalingeswara Temple | Kandaleeswarar | Uthama Chozheeswarar
Thenneri, Kanchipuram District, Tamil Nadu.

God: Sri Kandaleeswarar | Uthama Chozheeswarar
Goddesses: –
Location: https://goo.gl/maps/qe7FsUHRGyKHDPVj9

In a beautiful village called Thenneri, named after the lake Thirayaneri, this Sembiyan Mahadevi period Temple, Kanthalingeswarar Temple, was constructed. The Archaeological Survey of India ( ASI ) maintains this Kanthalingeswarar temple. The east-facing Temple has enchanting Nandhi housed in front. And inside the Mandapa, Vinayagar and Jyestha idols were seen.

Kanthalingeswara Temple | Kanthalingeswarar Temple, Thenneri
Kanthalingeswara Temple | Kanthalingeswarar Temple, Thenneri

Temple Architecture:
Kanthalingeswarar Temple architecture has Sanctum Sanctorum, Artha Mandapa, and Maha Mandapa has Antarala. Till Prastara Squared shaped, Nagara Vimana was built with granite stones. And above that, Vesara Vimana was constructed with bricks. In Koshta, Dakshinamurthy, Mahavishnu, Brahma, and Durgai were housed. Though the Maha Mandapa has Koshta, no idols were found.

History:
As per the inscriptions, scholars believe this Kanthalingeswarar Temple was built by Sembiyan Mahadevi (the Queen of Gandaraditya Chola Kandarathitha/Gandaraditya Chola) in memory of her deceased son Uttama Chola. And the inscriptions call this place “Uthukattu Kottathu Thankootru Uthamachozha Chaturvedi Mangalathu Uthamachozhapuram.” Rajaraja I Chola period inscriptions record the grant made by Sembiyan Mahadevi and also the offerings by Rajaraja I.

Special Thanks to
Babu Mano, Temple Architecture Trainer & History Enthusiast


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Chithiram Pesuthada