கொல்லிமலை அறப்பள்ளி ஈசுவரர் கோயில்

Arappaleeswarar Temple, Kolli Hills

வரலாற்றிலும், இலக்கியத்திலும் கொல்லிமலை பற்றிய செய்தி உண்டு. உதாரணமாக, அகநானூற்றுப் பாடல் ஒன்றில்,

“முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி”

~ அகநானூறு, 209
என்று வருவதைப் பார்க்கலாம்.

வல்வில் ஓரி” என்னும் மன்னன் ஆண்ட பகுதியும், காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் தவம் செய்ததுமான இம்மலையில் நாசிக்கு மூலிகை மணமும், கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் அறப்பள்ளி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய அறப்பள்ளி ஈசுவரர் கோயில்.

கோயில் கருவறையின நிலைக்காலில் உத்தம சோழனின் கி.பி. 986 நூற்றாண்டை சேர்ந்த செய்தி – உத்தமசோழனின் தாயார் பராந்தகன் மாதேவடிகள் என்ற செம்பியன் மாதேவியார் கொல்லிமலையிலுள்ள பன்னிரண்டு ஊராரிடத்து நூறு கழஞ்சுப் பொன் கொடுத்து அதன் வட்டியைக் கொண்டுவரும் வருவாயை ஒவ்வொரு திங்களும் அறப்பள்ளி ஈசுஹர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்த ஆவன செய்தமை என்ற செய்தியை கல்வெட்டுகள் குறிக்கின்றது.

கோயில் வடக்குப்புற கல்வெட்டு ஒன்றில் உத்தம சோழனின் கி.பி. 981 நூற்றாண்டை சேர்ந்த செய்தி – அறப்பள்ளி ஈசுவரர் கோவிலில் பணி செய்து வந்த ‘மாணி‘ கள் நால்வர் கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டு வெருணூர் நிலத்தில் பயிர்செய்து விளைந்த அரிசியில் சந்தி ஒன்றுக்குத் “திருவெள்ளறை காணம்” என்ற அளவினால் நான்கு நாழியாக மூன்று சந்திக்கு பன்னிரு நாழி அரிசி பெற்றுப் பூசை செய்ய ஒப்புக்கொண்டமை என்ற செய்தி கூறுகின்றது.

இப்படியாக முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜாதிராஜன், பொன்னேரிவர்மன், வேங்கடபதி தேவமகாராயர் காலத்திய கல்வெட்டு செய்திகள் இக்கோயிலுக்கு நிவந்தம் கொடுத்ததை கூறுகின்றது.

Arappaleeswarar Temple, Kolli Hills
Arappaleeswarar Temple, Kolli Hills

Sri Arappaleeswarar Temple | Kollimalai Sivan Koil

Ariyurnadu, Namakkal District, Tamil Nadu, India
God: Arappaleeswarar
Goddesses: AramValartha Nayaki
Location: https://goo.gl/maps/QvhoucX4qwcg3wgC9


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


This beautiful Arapalli Eswarar / Arappaleeswarar temple is located in Arapalli, where the king ruled “Valvil Ori” and where sage Kalangi first performed penance for eighteen Siddhas. Scholars believe the temple was built/reconstructed during the Chola period. This Arapalli Eswarar temple is considered Tevara Vaippu Sthalam, as Devaram hymns sung by Appar and Sambandar mention this temple.

Temple Architecture:
The east-facing Arapalli Eswarar temple has an enchanting Dvitala Vesara Vimana structure consisting of a Sanctum Sanctorum followed by an Antarala, Artha mandapa and Maha mandapa. The temple was built with stone from Adhisthanam to Prastara and brick from Prastara to Sikara. In Koshta, Dakshinamurthy, Vishnu, Brahma, and Durga were housed. 

The presiding deity is Swayambhu Moorthy (self-manifested), and he was called Arapalli Mahadevar | Arapaleeswarar | Arapalli Udaiyar, facing east.

History:
The inscriptions are recorded and published in Salem – Namakkal Mavatta Kalvettukal, by Tamil Palkalaikazhagam, Thanjavur.

The inscriptions in this temple record that Rajaraja Chola’s great-grandmother, Sembiyan Mahadevi and the wife of Kandaradita Chola visited the temple and donated to this temple. Inscriptions dating the reigns of Parantaka Chola, Uthama Chola, Rajaraja Chola, Kulothunga Chola, Rajadhiraja I and Vijayanagara King Venkatapati Raya can be found in this temple.


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici

Chithiram Pesuthada