தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | முகுந்த நாயனார் கோயில்
மாமல்லபுரத்தின் வடக்கே கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து சென்னைக்கு செல்லும் நெடுஞ்சாலைக்கு சிறுதொலைவிற்கு முன்பே, வலதுபுறமாக மக்கள் நடமாட்டமின்றி கிழக்கு நோக்கிய ஒரு கோயிலை காணலாம். மாமல்லபுரத்தில் காணப்படும் கோயில்களில், இக்கோயில் சற்று வித்யாசமானதாய் காணப்படும். “முகுந்த நாயனார் கோயில்” என்று அழைக்கப்படும் இக்கோயில், கல்வெட்டின் மூலம் “திருமுகலிப்பாமுடையார்” கோயில் என்று அழைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. இரண்டு அடுக்கு அமைப்போடு காணப்படும் இக்கோயில் தரைமட்டத்தை விட கீழே உள்ளது. கருவறை, முகமண்டபம் ஆகிய அமைப்போடு பாதபந்த அதிட்டான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நீள்சதுர…