தெரிந்த மாமல்லபுரம், தெரியாத இடங்கள் | அதிரணசண்ட மண்டபம்

அதிரணசண்ட குடைவரைக் கோயில்! சென்னை மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் புலிக்குகை வடபுறத்தே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதிரணசண்ட பல்லவேஸ்வர மண்டபம் என்ற பல்லவ வரலாற்றுச் சின்னம். இது ஒரு சிவன் கோயிலாகும். நீள்சதுரப் பாறையில் கிழக்கு நோக்கி அமைந்த்துள்ளது இந்த அதிரணசண்ட குடைவரைக் கோயில். முகப்பில், சதுரம், கட்டு, சதுரம் என்று அமைப்பில் இரண்டு முழுத் தூண்களும், இரண்டு அறைதூண்களும், வளைந்த தரங்கபோதிகைகளும், உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் போன்ற பிரஸ்தர…

கண் பார்வை அளித்த பெருங்குடி அகத்தீஸ்வரர்!

இன்றைக்கு நாம் பார்க்க போகின்ற இக்கோயில் சுந்தர சோழன் காலத்தில கட்டப்பட்ட சிவகாமி சுந்தரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில், அதுவும் கண் பார்வைக்கான தளமாக இந்த கோயில் கருதப்படுகின்றது. என்ன தம்பி திடீர் என்று புராணம் பேசுற அப்படினு உங்களுக்கு தோன்றும், இதை நான் கூறவில்லை, இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றது. இக்கோயிலானது திருச்சி வயலூர் செல்கின்ற சாலையில் சுமார் 8km தொலைவில், பெருங்குடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையும் இந்த கோவில அழகா பராமரிப்பு செய்து…

எழில்மிகு தாராலிங்கம்!

16 பட்டை கொண்ட தாராலிங்கம், ஐராவதேசர் கோவில் / ஐராவதேசம், காஞ்சிபுரம் பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் கூறுவர். சிவலிங்கங்கள் பலவிதங்கள் உள்ளது போல், சிவலிங்கத்தின் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை “தாராலிங்கம்’ என்று கூறப்படுகின்றன. சிற்பசாஸ்திரம் இவ்வகையான தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று கூறுகிறது. அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள்…

தமிழ்நாட்டின் பிரம்மாண்ட ராமர் கோவில்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் இக்கோவில் தமிழ்நாட்டிலே பிரம்மாண்டமாக ராமருக்காக கட்டப்பட்ட யோக ராமர் கோவில். அதுபோக ராமர் இங்க வித்தியாசமா காட்சி தருகிறார், காணொளி முழுக்க எதையும் miss பண்ணாம பாருங்க அதுபோக நம்ம channel-அ இதுவரைக்கும் subscribe பண்ணாதவங்க subscribe பண்ணிக்கோங்க. இக்கோவிலுக்கு ராமச்சந்திர பெருமாள் கோவில் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் இந்த பிரம்மாண்ட யோக ராமர் கோவில் இருக்கு. விஜயநகர மன்னர்களும்…

புதுச்சேரியில் ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில்

ரொம்ப நாள் கழிச்சு நம்ம இன்னைக்கு ஒரு அழகான கோவில பார்க்கப்போறோம். குண்டாங்குழி மகாதேவர் கோவில் இன்னைக்கு நாம பார்க்க போகிற இந்த கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட “திருகுண்டாங்குழி மகாதேவர் கோவில்“. இந்த கோவில் எங்க இருக்குன்னா விழுப்புரம் பாண்டிச்சேரி போகின்ற சாலையில் மதகடிப்பட்டு என்ற அமைதியான ஒரு ஊரில் தான் இருக்கு. இந்த கோவில ராஜராஜ சோழன் தான் கட்டினாரு சொல்லறத்துக்கு என்ன ஆதாரம், அதை நாம் இறுதியில் பார்க்கலாம். மேற்கு நோக்கி…

சோழர் கால கலை பெட்டகம்! குரங்கநாதர் கோவில்!

கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால கட்டடக் கலையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கும் ஒரு கலை பெட்டகம் இன்று காணப்போகிறோம். குரங்குநாதர் கோவில், சீனிவாசநல்லூர் திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், முசிறி தாண்டியதும் வருவது காவேரிகரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். இங்கே இடைக்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட குரங்கநாதர் கோவில் என்று இன்று அழைக்கப்படுகின்ற திருக்குரக்குத்துறை மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ள சிற்பங்கள் ஒவொன்றும் சோழ சிற்பக்கலையின் உச்சி என்றே கூறலாம். அந்த அளவிற்கு…

தெரிந்த மகாபலிபுரம், தெரியாத இடங்கள் | மகிஷாசுரன் குகை

மாமல்லபுரம் / மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் வடபுறத்தே கடல் அலைகள் சூழ ஒரு பெரிய பாறையின் மேல்புறத்தில் ஒரு குடவரை கோவில் ஒன்று குடையப்பட்டுள்ளது. குடைவரையின் மத்தியில் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகின்ற கொற்றைவையின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவைக்கு இருபுறமும் சிம்மமும், துவார பாலகிகள் காணப்படுகின்றனர். Mahabalipuram | Mamallapuram | Mahishasura Cave To the north of the Mamallapuram / Mahabalipuram Shore temple is a cave temple on a rock…

மலைக்குள் மறைந்திருக்கும் மகேசன்!

ஆற்காடு அருகே (சுமார் 17km) அமைந்துள்ள கரடி மலையில், கல் குவாரிகளில் இடையே மகேசன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். சிவனின் பாதம் அருகே சேதம் அடைந்திருப்பதால், அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். சிலையின் வடிவத்தை வைத்து இது சமீபத்தில் செய்யப்பட்டது என்று நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி கம்பீரமாக சிவனின் திருமேனி இதுவரை நான் கண்டதில்லை. YouTube: https://www.youtube.com/c/CookwithBabyma/videosInstagram: https://www.instagram.com/cookwithbabymaFacebook: https://www.facebook.com/chithirampesuthadasureshFlickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/ Thanks for supporting us!To contribute:PayPal us – paypal.me/sureshpriyanGoogle Pay us…

கிணற்றுக்குள் நடக்கும் அற்புத நிகழ்வு, நடவாவி உற்சவம்!

நடவாவி கிணறு | காஞ்சிபுரம் வரதராஜர் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்பவும் இந்த நடவாவி கிணறுக்கு வந்திருக்கேன். காரணம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் நடவாவி உற்சவம். நடவாவி கிணற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை, மறக்காம பாருங்க. https://chithirampesuthada.com/kanchipuram/ayyangarkulam-nadavai-kinaru/ | https://youtu.be/HSCbW0r-nZk நடவாவி உற்சவம் வருடா வருடம் சித்ரா பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் ஒரு அழகிய திருவிழா. யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் வரதருக்கு அபிஷேகம் செய்யப்படுவதே…

சிவனின் ஐம்பெரும் சபைகளில் ஒன்றான திருநெல்வேலி தாமிர சபை!

நடராஜர் தன்னுடைய நடனத்தினால் சிறப்பித்த ஐந்து தலங்கள், “ஐம்பெரும் சபைகள்” என்றும், “பஞ்ச சபைகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. பொற்சபை, வெள்ளி சபை, இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுகின்றன. இதில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இதில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலியில் அமைந்துள்ள முக்கியமான திருத்தலங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில்….

Chithiram Pesuthada