ரொம்ப நாள் கழிச்சு நம்ம இன்னைக்கு ஒரு அழகான கோவில பார்க்கப்போறோம்.
குண்டாங்குழி மகாதேவர் கோவில்
இன்னைக்கு நாம பார்க்க போகிற இந்த கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட “திருகுண்டாங்குழி மகாதேவர் கோவில்“. இந்த கோவில் எங்க இருக்குன்னா விழுப்புரம் பாண்டிச்சேரி போகின்ற சாலையில் மதகடிப்பட்டு என்ற அமைதியான ஒரு ஊரில் தான் இருக்கு. இந்த கோவில ராஜராஜ சோழன் தான் கட்டினாரு சொல்லறத்துக்கு என்ன ஆதாரம், அதை நாம் இறுதியில் பார்க்கலாம்.
மேற்கு நோக்கி சிவன் சன்னதியும், தெற்கு நோக்கி அம்பாள் சன்னதியும் இந்த கோவில் அமைச்சிருக்காங்க. இந்த கோவிலோட சிறப்பு, கோவிலோட அடித்தளம் தொடங்கி ஸ்தூபி வரைக்கும் அதாவது கலசம் வரைக்கும் முழுசா கருங்கல்ல வச்சி அழகா கட்டிருக்காங்க. இத தொல்லியல் துறையும் அழகா பராம்பரிச்சிட்டு வராங்க.
கோவிலோட கட்டிட அமைப்பு பார்த்தோம்னா கருவறை அர்த்தமண்டபம் வரைக்கும் தான் முழுசா பார்க்க முடியுது. அதுக்கு முன்னாடி இருக்கிற முக மண்டபம் அடித்தளம் மட்டும் தான் பார்க்க முடியுது. இந்த முகமண்டபம் சிவன் சன்னதியும் அம்பாள் சன்னதியும் இணைப்பது போன்று அமைச்சிருக்காங்க.
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
கோவிலோட அடித்தளம் அதாவது அதிஷ்டான பகுதியில் கூரை மாதிரி ஒரு அமைப்பு இருக்கு ஆகையால் இந்த அமைப்ப “கபோத பந்த தாங்குதளம்” வகையாக நாம இத எடுத்துக்கலாம். இன்னொரு அழகு கோவிலோட சுவர் வரைக்கும் சதுரமா இருக்கு அதுக்கு மேல வட்ட வடிவமா கட்டிருக்காங்க. இத ஒற்றை அடுக்கு அதாவது ஏகதல கலப்பு வேசரமாக இத கட்டிருக்காங்க. இத பார்த்தோம்னா ஒரு பெரிய மணிய கருங்களுல செஞ்ச மாதிரி இருக்கும். எவ்ளோ அழகா இருக்குதுனு பாத்தீங்களா.
கபோதம்னு பேசினோம்ல அங்க நிறைய கூடுகள் காட்டிருக்காங்க, அங்கே கடவுளர்கள், மனித உருவங்கள், விளங்கள்னு நிறைய குறுஞ்சிற்பங்கள் பார்க்க முடியுது.
அடுத்ததா கோவிலோட சுவரில் கோஷ்டம் காட்டிருக்காங்க ஆனா அங்க எந்த சிலையும் இல்லை. பிரம்மா, துர்கை, விநாயகரோட சிற்பம் மட்டும் பாண்டிச்சேரி அருங்காட்சியகத்தில் வச்சிருக்காங்க. கோவிலோட பூதவறியும், யாளிவரியின் அமைப்பை வைத்து இது சோழர்களோட கட்டிட கலை தான் நாம புரிஞ்சிக்கலாம்.
கோவிலோட அடுத்த சிறப்பு இங்கதான் இருக்கு கோவிலட க்ரீவ கோஷ்டத்துல, நாலு பக்கமும் சிற்பங்கள் இருக்கு. அதுல வடக்கு பக்கமா பிரம்மா இருக்காரு, மேற்கு பக்கமா விஷ்ணு இருக்காரு, தெற்கு பக்கமா யோக தக்ஷிணாமூர்த்தி பார்க்க முடியுது. கிழக்கு பக்கமா வித்தியாசமா இங்க முருகனை பார்க்க முடியுது. அதுபோக அணைத்து திசையிலும் ரிஷபம் அதாவது நந்திகள் அழகா வச்சிருக்காங்க. அது இந்த கோவிலுக்கு இன்னும் அழகு சேர்க்குது.
கருவறைல ஆவுடையார் இல்லாம பானம் மட்டும் இங்க பார்க்க முடியுது. இங்க குண்டாங்குழி மகாதேவர் என்று நமக்கு காட்சி தருகிறார் இறைவன். அம்பாள் அகிலாண்டேஸ்வரி வடிவா நமக்கு இங்க காட்சி தராங்க.
கல்வெட்டுகளில் “ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுபித்-தருளின திரு கற்றளி” என்ற ஒரு குறிப்பு வருது. அதாவது “ராஜா ராஜா சோழன் அவரே இந்த கோவிலை பூரி பட்டன் கட்டுனர் என்னும் நபரை வைத்து இக்கோவில் எழுப்பியதாக” இந்த கல்வெட்டு கூறுகின்றது. அதுபோக தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்புஇந்த கோவில கட்டினதாக நம்பப்படுகின்றது.
முதலாம் ராஜராஜன் தொடங்கி, முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களோட கல்வெட்டு இங்க நிறைய இருக்கு. அதுபோக கல்வெட்டுகள் இறைவனை “திருக் குண்டாங் குழ-சேரி ஒழுக்கரை மகாதேவன்” என்றும் இவூரை “திருபுவனை மகாதேவி சதுர்வேதிமங்கலம்” என்றும் மக்கள் அழைத்ததாக இந்த கல்வெட்டுகள் கூறுகின்றது.
மிகவும்அமைதியான ஒரு இடத்தில், மரங்களுக்கு மத்தியில இந்த கோவிலுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் கண்ண மூடிக்கிட்டு உட்கார்ந்த போதும், மனசுக்கு அவ்வளவு இன்பம் தருது.
நேரம் கிடைச்சா நீங்களும் ஒரு முறை வந்து பாருங்க. அடுத்த பயணம் இன்னோரு கோவில், மீண்டும் விரைவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
Kundankuzhi Mahadevar Temple | Sri Kundankuli Mahadevar Temple | Thirukundakuzhi Mahadevar Temple | Kundankuzhi | Thirukundakuzhi
Madagadipattu, Puducherry | Pondicherry, India
God: Sri TiruKundankuli Mahadevar
Goddesses: Sri Akilandeswari
Location: https://goo.gl/maps/UumsMLjqYe13npR69
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
In a beautiful village called Madagadipet, earlier called Madakadipatru, this Rajaraja I period Temple, Tirukundankuli Mahadevar Temple (AKA) Tirukundankudi Mahadeva temple, was constructed. The Archaeological Survey of India ( ASI ) maintains this Kundankuzhi Mahadevar temple.
Temple Architecture:
The west-facing Thirukundankuzhi Mahadevar temple has an enchanting Ekatala Vesara vimana structure consisting of a Sanctum Sanctorum followed by an Antarala Artha and dilapidated Muha mandapa. The entire temple is built with granite stones, and there are no niche idols in this temple. On the Vimanam, statues of Brahma, Vishnu, Dakshinamurthy and Subramaniyar were placed. Mother is called Akilandeswari, and she is housed in a separate south facing shrine.
History:
As per the inscriptions, scholars mention this Tirukundankuli Mahadevar Temple was built by Rajaraja Chola I. And also, scholars believe before the construction of the Thanjavur big temple, this Tirukundankudi Mahadeva temple was constructed. And the inscriptions call this place “Tirukundankuzi Chery Ozhukarai Mahadevar ” This place was called “Thirubhuvana Mahadevi Chathurvedhi Mangalam”. Inscriptions belongs to Rajaraja Chola I, Rajendra Chola I, Rajadhiraja Chola I, Kulothunga Chola, I were found here.
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici
Special Thanks to MuthuKumaran, Kalai Pavan