வேண்டிக்கொண்டவர்களுக்கு அனைத்தையும் அருளும் கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார்

Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar

கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் ஆலயம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்திலிருந்து தக்கோலம் வழியாக சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கேசாவரம். அதாவது “கயிலாய ஈஸ்வரம்” என்பதே மாற்றம் பெற்று “கேசாவரம்‘ பெயர் மறுவியுள்ளது.

Kesavaram Dam
Kesavaram Dam

மூன்று நதிகள் இங்கே சங்கமிப்பதால் புராணங்கள் இவ்விடத்தை “மோக்ஷ த்வீபம்” என்று அழைக்கின்றது. உத்திரவாகினியில் நீராடினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அப்படியாக வடக்கு நோக்கி பாய்கின்ற கொசஸ்தலை ஆறும், நாம் பார்க்க போகும் இந்த கைலாச ஈசனின் திருப்பாதத்தில் உருவானதாகப் புராணங்கள் கூறும் “வ்ருத்த க்ஷீரம்” எனும் கூவம் நதியும், கல்லாறு ஆகிய மூன்று நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன.

மோக்ஷ நதியில் நீராடி, இங்கே எழுந்தறியுள்ள “கயிலாய ஈஸ்வரமுடைய மகாதேவரையும்” இக்கோவிலின் வடப்பக்கத்தில் உள்ள பஞ்சாக்ஷர கிரி என்றழைக்கப்படும் மலைமேல் அமைந்துள்ள கூடல் சங்கமேஸ்வரரையும் (தற்பொழுது கோவில் இல்லை) ஒருங்கே வழிபட்டால் “காளஹஸ்தி, காசி, கயா” ஆகிய மூன்று புண்ணிய தளத்தின் பலன் இங்கு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகிறது.

ஒருமுறை குலோத்துங்க சோழனும், அவரது மனைவியுமான ஏழுலகமுடையாலும் தக்கோலத்தில் உள்ள திருவூறல் தளத்திற்கு வந்தனர். அப்பொழுது இத்தீவின் பெருமைகளை அறிந்து, புனித நீராடி ஈசனை வழிப்பெற்றனர்.

கயிலாய ஈஸ்வரமுடைய மகாதேவருக்கு ஓர் ஆலயம் இல்லாமல் இருப்பது கண்டு மனம் வருந்தினாள் ஏழுலகமுடையாள். தன் கணவரிடம் சொல்லி அங்கே ஒரு கற்றளியை ஈசனுக்கு உருவாக்கச் சொன்னாள். அவ்வாறு எழுந்த கஜபிருஷ்ட விமானத்தோடு கூடிய கற்றளிதான் பலநூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.

அதாவது ஒரு யானை படுத்து கொண்டிருக்கும் பொழுது அதோட பின்புறம் எப்படி இருக்குமோ அதே மாதிரி வட்டவடிவிலான அமைப்பு இருப்பதால், இதற்கு தமிழில் தூங்கானை மாடம் என்று அழைப்பார்கள்.

Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar

தொண்டை மண்டலத்தில், தூங்கானை மாடம் வடிவிலான கோவில்களை அதிகமாக பார்க்கலாம். இக்கோவிலின் இன்னொரு சிறப்பு விமானத்தின் மேற்பகுதி முற்றிலுமாக கருங்கற்களால் செய்யப்பட்டுள்ளது. பக்கத்தில் உள்ள சிவபுரம் சிவன் கோவிலின் விமானமும் கருங்கற்களால் செய்யப்பட்டதை பார்க்க முடியும்.

கருவறை, அர்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புடன் இக்கோவிலின் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது . மகா மண்டபத்தின் வடக்கு மற்றும் கிழக்கின் வெளிப்புற பாத சுவர் சேதம் அடைந்துள்ளது. இக்கோவில் பட்டிகை, கம்பு, கண்டம், முப்பட்டைக் குமுதம், ஜகதி, உப பீடம் ஆகிய உறுப்புகளுடன் பாதபந்த அதிஷ்டானம் வகையில் கட்டப்பட்டுள்ளது.

கோவிலின் கிழக்கு பக்கத்தில், நந்திதேவர் காணப்படுகிறார். பழைய சிலை உடைந்து போனதால், இங்கே புதிதாக நந்திதேவரை நிறுவியுள்ளனர். மற்ற கோவில்களின் கோட்டத்தை ஒப்பிடுகையில், இங்கு தெய்வங்கள் கோட்டத்தின் அறையை விட்டு சற்று வெளியே நீண்டு கொண்டு முப்பரிமாண தோற்றத்துடன் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

தெற்குப்புறமாக அர்த்தமண்டபச் சுவரில் விநாயகரும், கருவறை சுவரில் தட்சிணாமூர்த்தியும், கருவறை சுவரின் மேற்கில் லிங்கோத்பவரும், கருவறை சுவரின் வடக்கில் பிரம்மனும், அர்த்தமண்டபச் சுவரில் விஷ்ணு துர்க்கையும் காணமுடியும்.

விஷ்ணு துர்க்கையின் கையில் பிரயோகச் சக்கரமும், தட்சிணாமுர்த்தியின் காலடியில் இருக்கும் முயலகன் சற்று பெருத்தும் உள்ளது.

Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar

கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் கோவிலானது முதலாம் குலோத்துங்க சோழனின் கட்டப்பெற்றதாக இக்கோவிலின் கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது. கோவிலின் தாங்கு தளத்தில் உள்ள கல்வெட்டுகள் முதலாம் குலோத்துங்கன் காலத்து என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் குலோத்துங்க சோழனின் மனைவியான ஏழுலகமுடையாள் என்பவரால் நேரடியாக வழங்கப்பட்ட ஆணைக்கிணங்க, கேசாவரம் அருகே உள்ள “உரியூர்‘ என்ற ராஜமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஐந்து வேலி நிலத்தைப் பிரித்து அந்த நிலப்பகுதியை கயிலாச நல்லூருடன் இணைத்து கயிலாய ஈஸ்வரமுடைய மகாதேவர் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டதாக இக்-கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது போக சுவரில் உள்ள கல்வெட்டு 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் இதுவே தக்ஷிண காளஹஸ்தி, இதுவே காசி, இதுவே கயை என்று கூறுகின்றது. இங்கு ஈஸ்வரனை தரிசனம் செய்தால் காசி, காளஹஸ்தி, கயை ஆகிய தலங்களில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்ற செய்தி இக்கல்வெட்டின் மூலமாக காணக் கிடைக்கிறது.

மேலும் இவ்வாலயம் குபேரனால் வழிபடப்பட்டு வந்ததாக ஊர் மக்களால் அறியப்படுகின்றது. கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் உள்ள வெளிப்புற பாத சுவர் சிதிலமடைந்து காணப்படுவதால், உடைந்த அந்த சுவரில் ஏதேனும் கல்வெட்டு உள்ளதா என்று செய்தி கிடைக்கவில்லை.

கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் கோவிலானது முதலாம் குலோத்துங்க சோழனின் கட்டப்பெற்றதாக இக்கோவிலின் கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது. கோவிலின் தாங்கு தளத்தில் உள்ள கல்வெட்டுகள் முதலாம் குலோத்துங்கன் காலத்தியது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் குலோத்துங்க சோழனின் மனைவியான ஏழுலகமுடையாள் என்பவரால் நேரடியாக வழங்கப்பட்ட ஆணைக்கிணங்க, கேசாவரம் அருகே உள்ள “உரியூர்‘ என்ற ராஜமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஐந்து வேலி நிலத்தைப் பிரித்து அந்த நிலப்பகுதியை கயிலாச நல்லூருடன் இணைத்து கயிலாய ஈஸ்வரமுடைய மகாதேவர் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டதாக இக்-கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது போக பாதசுவரில் உள்ள கல்வெட்டு 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் இதுவே தக்ஷிண காளஹஸ்தி, இதுவே காசி, இதுவே கயை என்று கூறுகின்றது. இங்கு ஈஸ்வரனை தரிசனம் செய்தால் காசி, காளஹஸ்தி, கயை ஆகிய தலங்களில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்ற செய்தி இக்கல்வெட்டின் மூலமாக காணக் கிடைக்கிறது.

மேலும் இவ்வாலயம் குபேரனால் வழிபடப்பட்டு வந்ததாக ஊர் மக்களால் அறியப்படுகின்றது. கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் உள்ள வெளிப்புற பாத சுவர் சிதிலமடைந்து காணப்படுவதால், உடைந்த அந்த சுவரில் ஏதேனும் கல்வெட்டு உள்ளதா என்று செய்தி கிடைக்கவில்லை.

Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar Temple

ஆற்றின் நீர் வறண்டு, புனித நீராடுவது நின்று, மக்களும் புலம் பெயர்ந்து, இக்கோவிலை கவனிப்பின்றி விட்டதால் செடி கொடிகள் முளைத்து இந்த கோவில் சிதிலமடைந்து இருந்துள்ளது.

கோவில் விமானம் கற்கள் ஒதுங்கி, மிகவும் சேதம் அடைந்துள்ளது. முகமண்டபத்தின் மேற்கூரை விழாமல் இருக்க, ஊர் மக்களும், தன்னார்வ தொண்டர்களும் சேர்ந்து தற்காலிகமான மேற்கூரை அமைத்து மழைநீர் புகாதவாறு செய்துள்ளனர்.

இந்த ஆலயத்தை வழிபாட்டுக்குக் கொண்டுவந்த பின்பு, பல்வேறு மக்களும் இதை நாடிவருகிறார்கள் என்கிறார் செல்வம்.

இவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்க இந்த கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் ஆலயம், தனது முழு பொலிவை இழந்து நிற்கின்றது. இதை அரசும், தன்னார்வ தொண்டர்களும் சேர்ந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மனதிற்கு அமைதி தரக்கூடிய இக்கோவிலை நீங்களும் ஒரு முறையேனும் சென்றுபாருங்கள்.

Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar Temple

Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar Temple

Kesavaram Kailaya Eswaramudaiya Mahadevar Temple,
Kesavaram, Arakkonam Taluk, Ranipet District.
God: Kailaya Eswaramudaiya Mahadevar.
Goddesses: –
Location: https://goo.gl/maps/9wHmpMttBpZ2g24D6
Contact: Selvam, 9976671701

Moksha Dweep, An island, was formed by two rivers – Kosasthalaiyar and Kallaru by encircling and forming the village Kesavaram. At Kesavaram Dam, the Kosasthalaiyar river splits into two rivers. The second river thus originates here is called as Cooum river. Kosasthalayar river believed as Moksha Nadhi flows from south to north and is called Uttaravauhini.

Kailasa Eswaramudaiya Mahadevar Temple is a structural stone temple built by Kulottunga Chola I (1070 – 1122 A.D.). The temple has Chola period inscriptions. The inscription Kulottunga Chola I registers the contribution of Uriyur village as a land endowment to Kailaya Eswaramudaiya Mahadevar. The Ezhulagamudaiyaal, the queen of Kulothunga Chola I, made grants to construct the Kailaya Eswaramudaiya Mahadevar temple.

And also, the 17th-century inscription at the temple mentions this temple as Dakshina Kalahasthi, equivalent to Kasi and Gaya Kshetras, and anyone bathing in the Moksha Nadhi and worshipping the Koodal Sangameswarar atop the Panchatchara Giri and then Kailai Eswaramudaiya Mahadevar will be freed from future births and attain Moksha. 

The east-facing temple does not have gopura or flagstaff. Instead, the stone temple has the Gajaprishta Vimana resembling the backside of the sleeping elephant. The temple has the Sanctum, Ardha-Mandapam and Maha Mandapam. The simple PadaBandha base (Adhishtanam) with Upa-Peeta, Jagadi, Tripatta Kumuda, Khanta and Pattika mouldings. 

The beautiful sculptures of Ganesha, Dakshinamurthy, Lingodbhava, Brahma and Vishnu Durga are found in koshta. The beautiful Ganesha, Dakshinamurthy, with an oversized Muyalagan at his feet, and a stylish Durga, resembles the 3D view. A unique feature on the west side of Griva koshta has Narasimha over Lingothbhavar.

Beheaded idols of Dwara Ganapathy, Goddesses and Uma Sahitha Murthy lay dumped in a corner. The temple is currently in a dilapidated state. However, few volunteers have been spending reasonable effort and time in recent times to renovate this temple. The temple built by Kulothunga Chola can be glorified only if the Government and Volunteers take action to recover to the initial state.


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Chithiram Pesuthada