பல்லவ பேரரசின் கடைசி அரசரான “அபராஜிதவர்ம பல்லவன்” ஆட்சி காலத்தில் நம்பி அப்பி என்பவர் கருங்கற்களை கொண்டு செஞ்சடைஈசர்க்குக் தூங்கானைமாட வடிவிலான இக்கோயில் கட்டியுள்ளார் என்று இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. நற்கலைகள் எல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி விருப்பத்துடன் இக்கோயிலை பொற்புறக் கட்டினார் என்பதைப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஒரு வெண்பா மூலம் பாடி அதனைக் கல்வெட்டாகவும் வெட்டி வைத்துள்ளான்.
“திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்
கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியே
நற்கலைக ளெல்லா நவின்றசீர் நம்பியப்பி
பொற்பமைய செய்தான் புரிந்து“
என்று வெண்பா இலக்கணப்படி பாடப்பட்டுள்ளது. திருத்தணியின் பெயர் திருத்தணியல் என்றும் இறைவன் செஞ்சடை ஈசர் எனவும் காண்கிறோம்.
இக்கோயில் அமைப்பு அடிமுதல் சிகரம் வரை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பெற்ற தூங்கானைமாட வடிவிலான கோயிலாகும். தொண்டை மண்டலத்தில் அதிகம் காணப்படும் தூங்கானைமாட கோயில்களில் இது தனித்துவமானது. காரணம் பச்சைநிற கற்களினால் பூமிதேசத்திற்கு மேல் தூங்கானைமாட வடிவம் அழகுற அமைப்பட்டுள்ளது. அதுபோக லலாட நாசியில் உமாமகேஸ்வர பார்வதியின் சிற்பம் அமைந்திருப்பது இக்கோயிலுக்கு அழகு சேர்கின்றது.
கோயில் கோட்டத்தில் காணப்படும் சிற்பங்கள் பல்லவர்கால கலைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதில் தக்ஷிணாமூர்த்தியின் சிற்பம், இடதுகாலை மேலே தூக்கி வைத்திருப்பதும், கீழே மான், எலி, பாம்பு இருப்பதும் கவனிக்கத்தக்கது.
முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், விக்ரம சோழன் ஆகியோரின் கல்வெட்டும் இங்கே காண முடிகின்றது. அதில் திருப்பதிக்கு செல்பவருக்கு, வருபவர்க்கு ஆகாரமிட அறக்கட்டளை உருவாக்கி கொடையும் தரப்பட்டுள்ளதாக செய்தி கிடைக்கின்றது
அதுபோக நிலமும், ஆடுகளும், பசுக்களும் தானமாக கொடுத்த செய்தியும் இங்கே காணப்படுகின்றன. அதில் திருத்தணியை “ஜனநாத சதுர்வேதி மங்களம்” என ராஜராஜன் பெயரில் வழங்கப்பட்டதாக முதலாம் ராஜேந்திரன் சோழனின் கல்வெட்டு கூறுகின்றது.
இத்தனை சிறப்பு மிகுந்த இக்கோயிலை நேரம் கிடைத்தால் நீங்களும் நேரில் சென்று காணுங்கள்.
Gem of Architecture, Veerateeswarar Temple
Erular Colony, Thiruttani, Ranipet District, Tamil Nadu.
Location: https://goo.gl/maps/9ntg6zm5SVUszPJM7
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
In a beautiful place called Thiruttani, this Pallava period, Veerateeswarar Temple, was constructed. Thiruthani Murugan temple management maintains this Veerateeswarar temple.
Temple Architecture:
The east-facing Veerateeswarar temple has an enchanting Ekatala Gajaprishta Vimana (apsidal shape – means the back of an elephant) structure consisting of a Sanctum Sanctorum followed by an Antarala and Artha mandapa. The temple was built with stone from Adhisthanam to Sikara. In Koshta, Ganesha, Dakshinamurthy, Vishnu, Brahma, and Durga were housed. The Gajaprishta Vimana is constructed with Greenstone, where Umamaheshwara Parvati is housed on the Lalada Naasi. The Veerateeswarar temple of polished granite is a gem of architecture and the latest Pallava structural temples.
The sculptures found in the temple complex are an example of Pallava artistry. It is worth noting that there is a sculpture of Dakshinamurti with his left leg raised and a deer, rat and snake below.
History:
As per the inscriptions, Veerateeswarar Temple was built during the last Pallava king Abarajitha Varman period. Also, Pallava king Abarajitha Varman composed a poem in the form of a venba (below), in which he mentions Nambi Appi constructed this stone temple.
“திருந்து திருத்தணியல் செஞ்சடை யீசர்க்குக்
கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பியே
நற்கலைக ளெல்லா நவின்றசீர் நம்பியப்பி
பொற்பமைய செய்தான் புரிந்து”
The inscriptions of Rajarajan I, Rajendran I and Vikrama Cholan can also be found here. There is news that a charity has been created to feed pilgrims for those who go/return to/from Tirupati. The inscription mentions a Gift for a lamp, and the overseeing of the endowment was placed in the hands of the annual committee.
According to inscriptions, Thiruttani ancient name was Tiruttaniyal. Also the message of donation of land, goats and cows is also found here. A description of Rajendran Chola I says that the Thiruttani was called “Jagannatha Chatur-vedimangalam“.
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici