கண் பார்வை அளித்த பெருங்குடி அகத்தீஸ்வரர்!

இன்றைக்கு நாம் பார்க்க போகின்ற இக்கோயில் சுந்தர சோழன் காலத்தில கட்டப்பட்ட சிவகாமி சுந்தரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில், அதுவும் கண் பார்வைக்கான தளமாக இந்த கோயில் கருதப்படுகின்றது. என்ன தம்பி திடீர் என்று புராணம் பேசுற அப்படினு உங்களுக்கு தோன்றும், இதை நான் கூறவில்லை, இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றது. இக்கோயிலானது திருச்சி வயலூர் செல்கின்ற சாலையில் சுமார் 8km தொலைவில், பெருங்குடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையும் இந்த கோவில அழகா பராமரிப்பு செய்து…

புதுச்சேரியில் ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில்

ரொம்ப நாள் கழிச்சு நம்ம இன்னைக்கு ஒரு அழகான கோவில பார்க்கப்போறோம். குண்டாங்குழி மகாதேவர் கோவில் இன்னைக்கு நாம பார்க்க போகிற இந்த கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட “திருகுண்டாங்குழி மகாதேவர் கோவில்“. இந்த கோவில் எங்க இருக்குன்னா விழுப்புரம் பாண்டிச்சேரி போகின்ற சாலையில் மதகடிப்பட்டு என்ற அமைதியான ஒரு ஊரில் தான் இருக்கு. இந்த கோவில ராஜராஜ சோழன் தான் கட்டினாரு சொல்லறத்துக்கு என்ன ஆதாரம், அதை நாம் இறுதியில் பார்க்கலாம். மேற்கு நோக்கி…

சோழர் கால கலை பெட்டகம்! குரங்கநாதர் கோவில்!

கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால கட்டடக் கலையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கும் ஒரு கலை பெட்டகம் இன்று காணப்போகிறோம். குரங்குநாதர் கோவில், சீனிவாசநல்லூர் திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், முசிறி தாண்டியதும் வருவது காவேரிகரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். இங்கே இடைக்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட குரங்கநாதர் கோவில் என்று இன்று அழைக்கப்படுகின்ற திருக்குரக்குத்துறை மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ள சிற்பங்கள் ஒவொன்றும் சோழ சிற்பக்கலையின் உச்சி என்றே கூறலாம். அந்த அளவிற்கு…

வேண்டிக்கொண்டவர்களுக்கு அனைத்தையும் அருளும் கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார்

கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் ஆலயம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்திலிருந்து தக்கோலம் வழியாக சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கேசாவரம். அதாவது “கயிலாய ஈஸ்வரம்” என்பதே மாற்றம் பெற்று “கேசாவரம்‘ பெயர் மறுவியுள்ளது. மூன்று நதிகள் இங்கே சங்கமிப்பதால் புராணங்கள் இவ்விடத்தை “மோக்ஷ த்வீபம்” என்று அழைக்கின்றது. உத்திரவாகினியில் நீராடினால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அப்படியாக வடக்கு நோக்கி பாய்கின்ற கொசஸ்தலை ஆறும், நாம் பார்க்க போகும் இந்த கைலாச ஈசனின் திருப்பாதத்தில் உருவானதாகப்…

மகனுக்கு தாய் கட்டிய கந்தழீஸ்வரர் கோவில்!

சோழ சாம்ராஜ்யத்தின் ராஜமாதா என்று அழைக்கப்பெற்ற “செம்பியன் மாதேவியால்” தன் மகன் உத்தமசோழனின் நினைவாக கட்டப்பட்ட “உத்தமசோழீஸ்வரம்” என அழைக்கப்படும் “கந்தலீஸ்வரர் / கந்தழீஸ்வரர்” கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. விசாலமான இடத்தின் மையத்தில் தரைமட்டத்தை விட குறைந்தது 3அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமைந்த இக்கற்றளி தற்பொழுது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் கட்டுமான அமைப்பு கருவறை, அர்த்தமண்டபம், அந்தராளம்,…

ஆனந்த வாழ்வு தரும் சோழர் கால ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்னேரி!

குலோத்துங்க சோழன் காலத்திய ஆனந்தவள்ளி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவிலானது, காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் அருகேயுள்ள திரையனூர் என்று அழைக்கப்பெற்ற தென்னேரி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இவ்வூரிலுள்ள ஏரி திரையனேரி என்றும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது. கோவிலுக்குள் நுழையும் முன்பு கொடிமரம் இல்லாமல் பலிபீடமும், நந்தி தேவர்க்கு தனி மண்டபமும் அமைந்துள்ளன. கோவில் கட்டிட கலையானது முப்பட்டை குமுதத்துடன் காணப்டும் அடித்தளம் பாதபந்த அதிட்டானம் என்ற அடிப்படையில் கட்டப்பெற்றுள்ளது. கிழக்கு…

சக்தி வடிவங்களில் ஒன்றான துர்க்கை!

நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை, தேவியின் பல வடிவங்களில் ஒன்றாகும். துர்க்கையின் பல அவதாரங்களில், கருணையும் உக்கிரமும் கொண்டதாகத் திகழ்வது துர்க்கை ரூபம் என்கிறது புராணம். நான்கு கரங்களை உடையவள் – சங்கு மற்றும் சக்கரம் (பிரயோக சக்கரம்) ஆகியவற்றை தன் மேல் கையில் ஏந்தியவள். இடது கை அவள் தொடையிலும், வலது அபய முத்திரையுடன் காண்பவள். இடம்: இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவில், சிவபுரம் Vishnu Durga Vishnu Durga, also known as Narayani,…

சூரியன் வழிபட்ட பதங்கிஸ்வரர் ஆலயம்!

அருள்மிகு பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பாலாற்றங்கரையில் வடக்கு புறத்தில், கிழக்கு நோக்கி அமைந்த பிரமராம்பிகை உடனுறை பதங்கீஸ்வரர் ஆலயம் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பெற்றது. பின்பு வந்த சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. முகமண்டபம் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டடுக்கு விமானத்துடன், பாதபந்த அதிட்டானத்துடன் கட்டப்பெற்றுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உற்றுர் கோட்டத்து பெரும்பலையூர் நாட்டு பெரும்பலையூர் என்றும் ராஜேந்திர சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றது. முதலாம் பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்க…

வரங்களை அள்ளித்தரும் கரி வரதர்!

கரி வரதர் பெருமாள் கோவிலானது, கருவை, அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் காணப்படுகிறது. முகப்பில் கருடனும், கருவறையில் தன் தொடையில் தாயாரை அமர்த்தியவாறு கரி வரதர் பெருமாள் காட்சியளிக்கிறார். கருவறையின் சுவர் பகுதியில் மேற்கு நோக்கி அமைந்த கோட்டத்தில், ஆதிசேஷன் மேல் அமர்ந்தவாறு பச்சைக்கல்லால் ஆன பெருமாள் “பரமபத நாதன்” திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இடம்: கரி வரதர் பெருமாள் கோவில், பனம்பாக்கம், கடம்பத்தூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில், செஞ்சி, பனம்பாக்கம் The Karivarada Perumal Temple…

ஆலமர்செல்வன்! தெக்கணமூர்த்தி! தட்சிணாமூர்த்தி!

அமைதியாக புன்னகை தவழும் முகத்தோடு அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து, வலக்காலை முயலகன் முதுகின்மீது தொங்கவிட்டு, பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். பெரும்பாலும் ஆலயங்களில் முயலகன் மீது கால் வைத்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு சாத்திரங்களை உபதேசம் செய்கின்ற வியாக்கியான தட்சிணாமூர்த்தியையே தரிசிக்கிறோம். இடம்: ஜனமேஜய ஈஸ்வரர் கோவில் All Siva temples have the image of Dakshinamurthy in the South-facing Koshta. And also, the…

Chithiram Pesuthada