கோவில்களில் துவாரபாலர்கள்!

கோவில் வாசலில் துவாரபாலர் இருவர் இருப்பதை நாம் காணமுடியும். “துவாரா” என்ற சொல் “வாயில்” என்றும், பால என்பது “காப்போன்” என்றும் பொருள்படும். கோவில்களில், துவாரபாலர் படிமங்கள் தல புராணத்தின் பின்னணியில் வைக்கப்பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக துவாரபாலர்கள் கோவில் வாயில்களின் இருபுறங்களிலும் காணப்படும் வாயிற்காப்போர் உருவங்கள். சிவன் கோவில்களில் திரிசூலநாதர் – மழுவுடையார், சண்டி – முண்டி, உய்யக்கொண்டார் – ஆட்கொண்டார், சண்டன் – பிரசண்டன், பிரம்மா – திருமால் ஆகிய துவாரபாலர்கள் காணமுடியும். வைணவ…

ஐயாறப்பர் கோவிலில் காணப்படும் சிவபார்வதியின் கலைநயம் மிக்க புடைப்பு சிறப்பம்!

தேவாரத் திருத்தலங்களின் ஒன்றான திருவையாறு, ஐயாறப்பர் கோவிலில் காணப்படும் சிவபார்வதியின் கலைநயம் மிக்க புடைப்பு சிறப்பம். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். “புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கிஅறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்திஅலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங்கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.” – என்று திருஞானசம்பந்தர் திருவையாரை பதிகத்தில் பாடுகிறார். நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடுநலந்திகழும்…

முழுமுதற் கடவுள் விநாயகர்!

“ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தி னிளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.” – பத்தாம் திருமுறை சிவபுரம் ஸ்ரீ இராஜராஜ ஈஸ்வரமுடையார் கோவில் அர்த்த மண்டபத்தின் தெற்கு தேவகோட்டத்தில், விநாயகர் பத்ம பீடத்தில் லலிதாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். விநாயகரின் மேல் வலது கரத்தில் அங்குசம், கீழ் வலது கரத்தில் தந்தம், மேல் இடது கரத்தில் பாசம், கீழ் இடது கரத்தில் மோதகம் ஆகியவற்றுடன் காணப்படுகிறார். தலையில் கரண்ட மகுடமும், அதற்குமேல்…

அமர்ந்த கோலத்தில் மகாவிஷ்ணு!

தக்கோலம் ஜலநாதேஸ்வரர் கோவில் கருவறையின் பின்புற கோட்டத்தில் “மகாவிஷ்ணு” வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம், பிரயோகச் சக்கரமாக வடிவில் பார்க்க முடிகின்றது. இது கோவிலின் பழமையை குறிக்கின்றது.பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, பின்பு சோழ மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் விரிவிவாக்கம் செய்யப்பெற்றது. இடம்: திருவூறல் – தக்கோலம் YouTube: https://www.youtube.com/c/chithirampesuthadaFacebook: https://www.facebook.com/chithirampesuthadasureshInstagram: https://www.instagram.com/chithirampesuthada/Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/Web: https://chithirampesuthada.com/

அபூர்வ கோலத்தில் தெக்கணமூர்த்தி!

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) தலையை சற்றே சாய்த்து பார்க்கும் அழகு வேறெங்கும் காணமுடியாது அபூர்வ கோலம். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். தமது வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக் காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார் தெக்கணமூர்த்தி. காலடியில் முயலகன் இல்லை. வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில்…

செந்நிறத்தில் ஜொலிக்கும் ஒரு அழகான பொக்கிஷம்!

இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சி கரூர் செல்லும் சாலையில் காவிரிக்கரையின் மேல் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்தக் கற்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து திருச்செந்துறை “மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர சுவாமி திருக்கோவிலை”-த்தான் இன்று பார்க்கப் போகிறோம்! முதலாம் பராந்தகச் சோழனின் மருமகளும், அரிகுல கேசரியின் மனைவியான இருக்குவேளிர் குலத்தேவியான “பூதி ஆதித்த பிடாரி” என்னும் சோழப் பேரரசியால் இக்கற்றளி கட்டமைக்கப்பட்டது. கிழக்கு நோக்கி அமைந்த இக்கோவில், ஐந்தடுக்கு ராஜகோபுரத்தில் உள்ள சுதை…

Chithiram Pesuthada