அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அமிர்தகலசநாத சுவாமி திருக்கோயில்
திருக்கலயநல்லூர் – சாக்கோட்டை – கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் அமிர்தகலசநாதர் /அமிர்தகடேஸ்வரர் இறைவன் காட்சியளிக்கின்றார். திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 131வது திருக்கோயிலாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 68ஆவது சிவத்தலமாகவும் விளங்குகின்றது.
இத்தலத்தில் பச்சைக்கல்லால் ஆன லிங்கோற்பவர் சிற்பம் மிகவும் சிறப்புக்குரியது. லிங்கோற்பவர் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே அன்னமும், இருபுறத்தில் பிரம்மன்னும் திருமாலும், காணப்படுகின்றனர். புடைப்புச் சிற்பங்களான அர்த்தநாரி வடிவமும், தபஸ்வியம்மன் இத்தலத்திற்கே உண்டான சிறப்பு.
இக்கோவிலானது ராஜராஜன் காலத்திற்கு முன்பு சோழர் காலத்தில் கற்கோயிலாக புனரமைக்கப்பட்டது என்று வல்லுனர்களால் நம்பப்படுகின்றது. தஞ்சாவூர் நாயக்கர்கள் / மராட்டிய காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் பராமரிக்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும், 16 (அ) 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்க மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
Amirthakalasanathar Temple, Sakkottai
Thirukkalayanallur, Thanjavur District, Tamil Nadu.
God: Amirthakalasanathar | Amithakalesar
Goddesses: Amirthavalli
Location: https://goo.gl/maps/gtScNB33UiioJxeq9
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
In a beautiful village called Sakkottai (AKA) Thirukkalayanallur, this Chola period Temple, Amirthakalasanathar Temple / Amirthakateshwarar Temple, was constructed. This Amirthakalasanathar is the 68th Shiva temple on the south side of river Kaveri in the Chola Nadu region, praised in Thevaram hymns. The speciality of the temple is Thapas Amman.
Temple Architecture: The east-facing Amirthakalasanathar temple has a 3-tier Raja gopuram on the south. The Ekathala Vesara Vimana is over the sanctum sanctorum. In Koshta, Vinayaga, Dakshinamurthy, Lingodbhava, Brahma, and Durgai were housed. Lingodbhava is made of green stone with Maan and Mazhu with Brahma and Maha Vishnu on both sides.
History: Scholars believe the original temple existed during the 6-7th Century and was later reconstructed by Cholas, Thanjavur Nayakas, Maratha Period, and maintained by Nattukottai Nagarathars. Karikala Valavan is associated with this temple.
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici