தேவாரத் திருத்தலங்களின் ஒன்றான திருவையாறு, ஐயாறப்பர் கோவிலில் காணப்படும் சிவபார்வதியின் கலைநயம் மிக்க புடைப்பு சிறப்பம்.
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும்.
“புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி
அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமருங்கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட
முழவு அதிர மழையென்று அஞ்சிச்
சில மந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே.” – என்று திருஞானசம்பந்தர் திருவையாரை பதிகத்தில் பாடுகிறார்.
நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடு
நலந்திகழும் நாலாறும், திருவையாறும், தெள்ளாறும் …
என்று தனது திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறுகிறார்.
சைவ சமயத்திற்கு, சிவபெருமான் முதன்மையான கடவுளாக விளங்குகின்றார், இவரை பரமசிவன் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமான் உருவம், அருவம் (உருவம் இல்லாத நிலை), அருவுருவம்(உருவமும் அருவமும் கலந்த நிலை) என மூன்று வடிவங்களில் உள்ளார்.
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/