முழுமுதற் கடவுள் விநாயகர்!

Vinayagar

“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.”

– பத்தாம் திருமுறை

சிவபுரம் ஸ்ரீ இராஜராஜ ஈஸ்வரமுடையார் கோவில் அர்த்த மண்டபத்தின் தெற்கு தேவகோட்டத்தில், விநாயகர் பத்ம பீடத்தில் லலிதாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். விநாயகரின் மேல் வலது கரத்தில் அங்குசம், கீழ் வலது கரத்தில் தந்தம், மேல் இடது கரத்தில் பாசம், கீழ் இடது கரத்தில் மோதகம் ஆகியவற்றுடன் காணப்படுகிறார். தலையில் கரண்ட மகுடமும், அதற்குமேல் குடையும், இருபுறங்களில் சாமரமும் காணப்படுகிறது. கழுத்தில் கண்டிகை, சவடி, அரும்புச்சரம், கையில் கைவளையமும், காலில் சிலமுடன் காணப்படுகிறார். பீடத்தில் விநாயகரின் மூஷிக வாகனம் காணப்படுகிறது.

விநாயகர்
Sri Rajarajeswaramudaiya Mahadevar Temple

YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/

Chithiram Pesuthada