இன்றைக்கு நாம் பார்க்க போகின்ற இக்கோயில் சுந்தர சோழன் காலத்தில கட்டப்பட்ட சிவகாமி சுந்தரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில், அதுவும் கண் பார்வைக்கான தளமாக இந்த கோயில் கருதப்படுகின்றது. என்ன தம்பி திடீர் என்று புராணம் பேசுற அப்படினு உங்களுக்கு தோன்றும், இதை நான் கூறவில்லை, இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றது.
இக்கோயிலானது திருச்சி வயலூர் செல்கின்ற சாலையில் சுமார் 8km தொலைவில், பெருங்குடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையும் இந்த கோவில அழகா பராமரிப்பு செய்து வருகின்றனர்.
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
கோயில் வாசல் முன்புறம் கொடிமரம் இல்லாமல். பலிபீடம், நந்தி ஒரு தனி மண்டபத்தில் பார்க்க முடிகின்றது. இந்த நந்தியோட நெற்றி பகுதி கொஞ்சம் வித்யாசமா இருக்கு.
இந்த கோயிலோட கட்டிட கலை முதலில் பார்ப்போம்.
கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம், மகா மண்டபம் என்று இந்த கோயில் அமைச்சிருக்காங்க. பாத பந்த தங்குதளமாக கோயிலோட அதிட்டான அமைச்சிருக்காங்க. உபானம் மண்ணுக்குள் புதையுண்டுள்ளது, அனால் ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம் பட்டிகை பார்க்க முடிகின்றது.
கோயிலோட சுவரில் உள்ள தூண்களில் மாலை தொங்கல் குறுஞ்சிற்பமும் அழகா காமிச்சிருக்காங்க. வலபியில் பூத வரிகள் அழகா காட்டிருக்காங்க.
கூரை அதாவது பிரஸ்தரம் வரைக்கும் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது, அதற்கு மேற்புறம் செங்கல் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோக ஒற்றை அடுக்கு தலமாக இந்த கோயிலோட விமானம் அமைச்சிருக்காங்க.
கருவறை சுவரில் ட்டும் தான் இங்க கோஷ்டம் பார்க்க முடியுது.
கோயிலோட தென் புறமா தக்ஷிணாமூர்த்தி பார்க்க முடியுது. சோழர் கால சிறந்த எடுத்துக்காட்ட இந்த சிற்பம் இருக்கு. இன்னும் கூட இந்த சிற்பத்தோட உயிரோட்டம் உணர முடியுது.
மேற்கு பக்கமா பொதுவா லிங்கோத்பவர் இல்லை என்றால் விஷ்ணு பார்க்க முடியும். ஆனால் இங்கு அர்த்தநாதீஸ்வரர் சிற்பம் பார்க்க முடிகின்றது. இந்த மாதிரியான அமைப்பு பொதுவா முதலாம் ஆதித்தன் காலத்தில் பார்க்க முடியும்.
கோயிலோட வடக்கு புறமா நான்முகன் அவருக்கான இடத்தில் கம்பீரமா சோழர் கால கலைப்பாணியில் ஜொலிக்கிறார்.
சண்டிகேஸ்வரர் தனியா ஒரு சன்னதில தெற்கு நோக்கி இருக்கின்றார். இவரும் சோழர் கால சிற்பம் தான்.
அம்பாள் சன்னதி விஜய நகர மன்னன் விருப்பனன் காலத்தில் கட்டப்பட்டது. இந்த சன்னதியோட சுவர் பகுதியில் சுதை சிற்பமாக சுப யக்ஷினி, காமதேனு, அகஸ்திய மகரிஷி, வீர அனுமன் பார்க்க முடியுது.
தெற்கு நோக்கி இந்த சன்னதில அம்பாள் “சிவகாம சுந்தரி” வடிவாக காட்சி தருகிறாள். அம்பாள் சன்னதியின் இடது புறமாக மேற்கு நோக்கி சனீஸ்வரர் காண முடிகின்றது.
கோயிலோட மகாமண்டப வாசலுக்கு இருபுறம் நிறைய கடவுளர்கள் இருக்காங்க. வலது புறமா விநாயகர், வெங்கடேச பெருமாள், லட்சுமி நாராயணர் காண முடியுது. இடது பக்கமா அருணகிரி நாதரால் போற்றப்பட்ட முருகன் தெய்வானையுடன் இங்கே காட்சி தருகிறார். இவங்களுக்கு பக்கத்துல வாராகி, வைஷ்ணவி பிராம்மியோட சிற்பம் காண முடியுது.
கருவறையில் இறைவன் சுயம்புமூர்த்தியா அகத்தீஸ்வரர் வடிவில் காட்சி தருகிறார். அகத்திய முனிவரால் பாடல் பெற்ற இறைவன் என்றும் கூறப்படுகின்றது.
இக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் இருக்கு, அதில் சுந்தர சோழன் காலத்திய கல்வெட்டு காண முடியுது. ஆகையால் இக்கோயில் சுந்தரசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது வல்லுநர்கள் கருத்து. சுந்தர சோழன் தொடங்கி ஆதித்ய கரிகாலன், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான், வீர ராமநாத தேவன், விருப்பண்ணன் ஆகியோரது கல்வெட்டுகள் இங்கே பார்க்க முடிகின்றது.
அதில் போசள மன்னரான வீர ராமநாத தேவனின் 10ம் ஆட்சியாண்டில இக்கோயிலுக்கு திருப்பணி செய்கின்றார். அப்பொழுது நிதி பற்றாக்குறை ஏற்படுகின்றது. ஆகையால் தட்டாளரான கூத்தன் என்பவரிடம் உதவி கேட்டு செல்கிறார்கள். அதே நேரத்தில் கூத்தன் தன்னோட மகன் நல்ல மங்கைக்கு கண்பார்வை கிடையாது. மருத்துவ செலவுக்காக வைத்திருந்த மூன்று கழஞ்சு தங்கத்தை எடுத்து கோயில் திருப்பணிக்கு கொடுக்கின்றார். கோயில் திருப்பணி முடிந்து சில நாட்களில் நல்ல மங்கைக்கு கண்பார்வை கிடைக்கின்றது. இந்நிகழ்ச்சி கல்வெட்டாக இக்கோயிலின் தென் புறமா பார்க்க முடியும். அன்று முதல் இன்று வரை கண்பார்வை பரிகார தலமாக இந்த கோயில் பார்க்கப்படுகின்றது.
இன்றைக்கு இவ்வூரானது பெருங்குடி என்று கூறினாலும் கல்வெட்டுகள் பெருமுடி, திருப் பெருமுடி என்று கூறுகின்றது. அதுபோக இக்கோயிலின் இறைவன் இன்று அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டாலும் முற்காலத்தில் திருப்பெருமுடி பரமேஸ்வரர் என்று அழைக்க பெற்றதாக வல்லுநர்கள் சொல்கின்றனர்.
வடிவத்துல் இக்கோயில் சிறியதாக இருந்தாலும், பல வரலாற்று செய்திகள தாங்கி நிற்கின்றது. நேரம் கிடைத்தால் நேரில் சென்று காணுங்கள்.
வரலாற்றை தேடி என் பயணம் இன்னும் நிறைய போக வேண்டிருக்கு, அதுக்கு உங்களோட அன்பும் ஆதரவும் தேவையா இருக்கு. அடுத்து இன்னொரு கோயில், விரைவில் சந்திக்கிறேன், நன்றி வணக்கம்!
Agastheeshwarar Temple | Agatheeshwarar Temple
Perungudi, Tiruchirappalli District, Tamil Nadu, India
God: Agastheeshwarar | Thiruperumudi Parameshwarar
Goddesses: Shivagama Sundari
Location: https://goo.gl/maps/bFUfVuqL7s2x6sx77
YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/
In a beautiful village called Perungudi, this Medieval Chola period Temple, Agastheeshwarar, was constructed. The Archaeological Survey of India (ASI) maintains this Agastheeshwarar temple.
Temple Architecture:
The east-facing Agastheeshwarar has an enchanting Ekatala Vesara vimana structure consisting of a Sanctum Sanctorum followed by an Artha mandapa, Mukhamandapa and Mahamandapa. Koshta has Dakshinamurthy, Arthanareeswarar and Brahma. Shrines of Chandikeswara, Bala Vinayagar, Venkateshwara, Lakshmi Narayana, Murugan with Deivanai and Saneeswara saw in the Praharam.
Since Sundara Chola Inscriptions were found in this Agastheeshwarar Temple, Scholars believe the Agastheeshwarar Temple was constructed in 969 CE during the reign of Sundara Chola. And also, inscriptions call this village Perumudi / Thiruperumudi as per stone inscriptions. The Inscription belongs to Aditya Karikala, Jatavarman Sundara Pandyan, Konerinmai Kondan, Vira Ramanatha deva, Virupanna were found here.
Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici
Special Thanks to
Babu Mano, Temple Architecture Trainer & History Enthusiast
Rajavel Chandrasekar, Temple Architecture & History Enthusiast