சோழர் கால கலை பெட்டகம்! குரங்கநாதர் கோவில்!

Koranganatha Temple, Srinivasanallur

கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால கட்டடக் கலையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கும் ஒரு கலை பெட்டகம் இன்று காணப்போகிறோம்.

குரங்குநாதர் கோவில், சீனிவாசநல்லூர்

திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், முசிறி தாண்டியதும் வருவது காவேரிகரிக்கரை கிராமம் சீனிவாசநல்லூர். இங்கே இடைக்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட குரங்கநாதர் கோவில் என்று இன்று அழைக்கப்படுகின்ற திருக்குரக்குத்துறை மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.

கோவிலின் உள்ள சிற்பங்கள் ஒவொன்றும் சோழ சிற்பக்கலையின் உச்சி என்றே கூறலாம். அந்த அளவிற்கு நம் மனதைக் கொள்ளைகொள்கிறது இந்த சிற்பங்கள். காணொளியை முழுமையாக பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


சதுரமான கருவறை அமைப்புடன் இருதள நாகரமாக பார்க்கப்படும் இக்கோவிலின் விமானக் கட்டமைப்பு, கோவிலின் அடித்தளமும், அதன் மேல் உள்ள முதல் தளமும் ஒரே உயரத்தில் இங்கு பார்க்க முடியும். அதன் மேல் சிகரம் போன்ற அமைப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த மாதிரியான கட்டிட அமைப்பு வெகு சிலவே அதில் குரங்கநாதர் கோவிலும் ஒன்றாக கருதப்படுகிறது. கருவறை, இடைநாழிகையோடு அர்த்தமண்டபம், முகமண்டபம் கொண்டு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் தாங்குதளம் பிரதிபந்தத் அதிஷ்டானம் என்ற அமைப்பால் அழகுற கட்டப்பெற்றுள்ளது. இங்கே யாளி வரி, அதன் முடிவில் காணப்படும் மகரம். மகரத்தின் வாய் பகுதியில் வெளிவரும் வீரன் அல்லது மிருகத்தின் சிற்பம், கற்பனை எல்லைக்கு அப்பாற்பட்டது என்றே சொல்லலாம்.

Vyala Vari, Koranganatha Temple, Srinivasanallur
Vyala Vari, Koranganatha Temple, Srinivasanallur

இங்கே காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளது. சிதைவுகளை தாண்டி சிற்பத்தின் நுணுக்கங்கள் கண்களுக்கு ரம்மியமாக காட்சிகொடுகின்றதுதென் புறத்தில் பிச்சாடனர் காணப்படுகிறார். பிச்சாடனர் பக்கத்தில் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்துள்ளார். இவரை சுற்றி முனிவர்களும், சிங்கமும், பூதகணங்களும், புலிகளும், கின்னர்கள் சூழ, அவர் பாதமானது முயலகன் மீதும், பக்கத்தில் ஒரு மானும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கில் 3 தேவ கோஷ்டத்தில் 2இல் அப்சரஸ் என்று அழைக்கப்படுகின்ற தேவ மங்கைகள் மிகவும் அழகா காணப்படுகின்றனர். கருவறையில் உமையொருபாகன் சிற்பம் காணப்படுவதால் தேவ மங்கைகள் மத்தியில் வெறுமையாக காணப்படும் கோஷ்டத்தில் உமையொருபாகன் சிற்பம் இருந்திருக்கலாம்.

இன்னொரு முக்கியமான சிறப்பு, வேறெங்கும் காணமுடியாத பிரமாண்டமான சித்ர தோரணம். மகரத்தின் வாயிலிருந்து வெளிப்படும் சிம்மத்தின்மீது அமர்ந்த வீரர்கள், பல்வேறு முக உணர்ச்சிகள் காட்டும் பூத கணங்கள், அதில் ஒன்று சிங்கமுகத்தை தொந்தியாக கொண்ட சிற்பம் கவனிக்கப்படவேண்டியது. இந்த சிறப்பதிற்கு மத்தியில் வராஹமூர்த்தி, அவரது மடியில் லட்சுமியும் காண்பதற்கு அவ்ளோ அழகா இருக்கு.
இதை போல் நான் வேறெங்கும் கண்டதில்லை என்று புகழ்ந்து கூறுகிறார் “Madhusudan Dhaky.”

வடக்கில் மூன்று கோட்டத்தின் மத்தியில் நான்முகன் காணப்படுகிறார். அவருக்கு இருபுறம் உள்ள சிற்பங்கள் யார் என்பது கணிக்க முடியவில்லை. இக்கோவிலுக்கே உரித்தான ஒரு சிறப்பு இங்கே தூண்களில் காணப்படும் குறுஞ்சிற்பங்கள்.

அதிகார நந்தியும், அனுமனும் இசைக்க, ஈசன் கால் உயர்த்தி நடனமாடும் அருப்புத காட்சி வேறெங்கும் காணமுடியாத அரிதான ஒன்று. இன்னொரு சிற்பத்தொகுதியில், 5 அல்லது 6 அங்குலம் தான் இருக்கும், இதில் நடனம் ஆடுவது போன்று நாட்டிய மாதரும், அவருக்கு பக்கத்தில் இசை கருவி வாசிப்பதுபோன்று இசைக்கலைஜரும், சோழர் கால படைப்பிற்கு உச்சி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது இந்த சிற்பம்.

இங்கே கிடைக்கும் கல்வெட்டுகளில் முதலாம் ஆதித்த சோழரின் கல்வெட்டு மிக தொன்மையாக பார்க்க படுகிறது. இக்கோவில் முதலாம் பராந்தக சோழரால் கட்டப்பெற்றது என்று ஒரு சாரார் கூறினாலும் முதலாம் ஆதித்த சோழரின் கல்வெட்டு இங்கே கிடைப்பதால், அவரது காலத்தில் கூட கட்டப்பட்டிருக்கலாம் என்று இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது. ராஜராஜ சோழர், ராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர், மாறவர்மர் விக்கிரமபாண்டியர் என்று கல்வெட்டுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

சோழர் ஆட்சி காலத்தில் “வடகரை மழநாட்டு பிரமதேயமான மகேந்திரமங்கலத்துத் திருக்குரக்குத்துறை” என்று அழைக்கப்பெற்று இறைவனை “திருக்குறுக்குத்துறை பெருமானடிகள்” என்று கூறுகின்றது.

கோவிலுக்கு நன்கொடை அளிக்கப்பட்டு, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, வாரியம் அமைக்கப்பட்டு, அதில் உறுப்பினர் சேர்க்கப்பட்டு, செலவுகள் செய்தமை பற்றி கூறுகின்றது கல்வெட்டுகள்.

ஆக நம் முன்னோர்கள் நமக்கு முன்னோடிகளாகவே உள்ளனர்.

மொத்தத்தில், திருக்குறுக்குத்துறை கோவிலானது, கலைப் பெட்டகம் தான் என்று சொல்வதில் ஐயமில்லை. மேலும் உங்களின் ஆதரவை எதிர்நோக்கி இன்னொரு காணொளி தொகுப்போடு உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.

Koranganatha Temple, Srinivasanallur
Koranganatha Temple, Srinivasanallur

Koranganatha Temple | Tirukkurakkutturai Temple
Srinivasanallur, Tiruchirapalli District, Tamil Nadu.

God: Tirukkurakkutturai Perumanadigal
Goddesses: –
Location: https://goo.gl/maps/k2yCWv8GkZK28WEw5

In a beautiful village called Srinivasanallur, this Parantaka I period Temple, Koranganatha Temple, was constructed. The Archaeological Survey of India ( ASI ) maintains this Koranganatha temple. 

Temple Architecture:
The east-facing Koranganatha temple has an enchanting Dvitala Nagara vimana structure consisting of a Sanctum Sanctorum followed by an Antarala Artha mandapa and Muha mandapa. The temple was constructed with stone from Adhisthanam to Prastara, and the superstructure was built with brick. In Koshta, Bhikshatana, Dakshinamurthy, Dvarapala, Apsara, Brahma, and another later addition Dakshinamurthy (north wall), were housed. The west side of Chithra Torana, Varaha, with Bhoomadevi sitting on his lap, is shown at the centre. And Madhusudan Dhaky mentions this Chitra Torana as the finest Chitra Torana in South India.

History:
As per the inscriptions, scholars believe this Koranganatha Temple was built by Parantaka I. And also, scholars believe during Aditya’s reign, this Koranganatha temple existed. And the inscriptions call this place “Tirukkurakkutturai Perumanadigal at the Brahmadeya village of Mahendra Mangalam“. Incriptions belongs to Aditya I, Parantaka I, Gandaraditya, Rajaraja I, Rajendra I, Kulothunga I, Maravarman Vikkiraman II where found here.

Interior Vimana view, Koranganatha Temple, Srinivasanallur

Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici


Special Thanks to
Babu Mano, Temple Architecture Trainer & History Enthusiast
Rajavel Chandrasekar, Temple Architecture & History Enthusiast

Chithiram Pesuthada