நடுநாட்டில் சோழர் கால பொக்கிஷம்! – வேதபுரீசுவரர் கோயில், ஏமப்பூர்

Vedapureeswarar Temple, Emapur, Viluppuram District

ஏமப்பூர் என்று தற்பொழுது வழங்கும் இவ்வூர் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூருக்கு வடக்கே மலட்டாற்றின் வடகரையிலும், பெண்ணையாற்றின் தென்கரையிலும் அமைந்துள்ளது. ஏமப்பேரூர் ஒரு தனி நாடாக விளங்கி உள்ளது. இது ராஜேந்திர சிம்ம வளநாட்டு திருமுனைப்பாடியின் ஒருபகுதியாகும்.

கோயில் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்கால கலைத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பிட்ச்சாடனர், தட்சிணாமுர்த்தி, ரிஷபத்துடன் உமாசகித மூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். இதில் உமாசகிதர், பிட்ச்சாடனரின் சிற்பம் அழகின் உச்சம். கருவறை முகப்பில் பால கணபதியின் சிற்பம் இக்கோயிலுக்கு கூடுதல் சிறப்பு. மகர தோரணத்தில் நடுவில் விநாயகர், வீராசன தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, துர்கை ஆகிய குறுஞ்சிற்ப வடிவங்களுடன் திகழ்கின்றது. வடக்கு திருச்சுற்றில் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அழகுற அமைந்துள்ளதைக் காணலாம்.

Vedapureeswarar Temple, Emapur, Viluppuram District
Vedapureeswarar Temple, Emapur, Viluppuram District

இக்கோயில் கல்வெட்டின் மூலம் ஏமப்பேறூர் என்று அழைக்கப்பெற்று கால ஓட்டதால் ஏமப்பூர் என்று பெயர் மறுவியுள்ளது. பராந்தக சோழன் காலம் தொடங்கி இவ்வூரானது “திருமுனைப்பாடி ஏமப்பேறூர் நாட்டு ஏமப்பேறூர்” என்றும் இறைவன் “திருவாலந்துறை பரமஸ்வாமிகள்”, “திருவாலந்துறை ஆழ்வார்” என்றும் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றது.

இக்கோயிலில் முதலாம் பராந்தகன், சுந்தர சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்க சோழன், ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன.

முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டில் ஏமப்பேறூரில்‌ எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு, இவ்வூர்‌ சபையாரும்‌, ஊரவரும்‌ இறையிலிதேவதானமாக நிலம்‌ கொடுத்து உள்ளனர்‌. இவர்கள்‌ இந்நிலத்தின்‌ எல்லைகளையும்‌, நீர்பாய்கின்ற முறையையும்‌ குறிப்பிட்டுள்ளனர்‌. மேலும்‌ இந்நிலத்தின்‌ மூலம்‌ வரும்‌ நெல்லை, திருக்கோயிலில்‌ செய்யும்‌ பூஜைகளுக்கும்‌, நடைபெறுகின்ற இருவிழாக்களுக்கும்‌, வேலை செய்கின்ற பணியாளர்‌ ஊதியங்களுக்கும்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌ அறியமுடிகிறது.

இறைவனுக்கு மூன்று சந்தியும் திருவமிர்து, இரண்டு கரியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய், வெற்றிலை கொண்டு வழிபாடு செய்ப்பட்டதை இக்கல்வெட்டுகள் கூறுகின்றது. இக்கோயிலுக்கு நந்தா விளக்கு எரிப்பதற்கு 192 ஆடுகள், 32 பசுக்கள் இறையிலிதானமாக கொடுத்த செய்தி அறியமுடிகின்றது.

மதிரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் காலத்திய கல்வெட்டில் திருமுனைப்பாடி ஏமப்பேறூர் நாட்டைச் சேர்ந்த குடுப்பாஞ்ஞூற்றூராகிய முனையராதித்தன் சதுர்வேதி மங்கலத்திலுள்ள காஸ்யபன் குட்டி என்ற பிராமணர் இவ்வூர் கோயிலுக்கு பூமாலை அளிக்க நிலம் கொடுத்த செய்தியும், அந்நிலத்தில் பூந்தோட்டம் அமைத்து தினந்தோறும் ஆறு சாண் நீளத்தில் பூமாலை தயாரித்து இறைவனுக்கு அணிவிக்க ஏற்பாடு செய்தது பற்றியும் தெரிவிக்கிறது.

இது போல் பல நிகழவுகள் இக்கோயில் கல்வெட்டின் மூலம் அறியமுடிகின்றது. இத்தனை சிறப்புகள் பெற்று நம் முன்னோர்களால் ஜோதிமயமாக காணப்பட்ட இக்கோயில் மக்கள் நடமாட்டமின்றி இன்று வெறிச்சோடி காணமுடிகின்றது. நேரம் கிடைத்தால் நீங்களும் நேரும் சென்று வாருங்கள்.


Vedapureeswarar Temple

Emapur, Viluppuram District, Tamil Nadu, India
Location: https://maps.app.goo.gl/p43Fkr155VrepgSv9


YouTube: https://www.youtube.com/c/chithirampesuthada
Facebook: https://www.facebook.com/chithirampesuthadasuresh/
Instagram: https://www.instagram.com/chithirampesuthada/
Flickr: https://www.flickr.com/photos/chithirampesuthada/
Web: https://chithirampesuthada.com/


God: Vedapureeswarar | Vedanathar.
Goddess: Vedanayagi | Balakujambal.

In a beautiful place called Emapur, this Chola period, Vedapureeswarar Temple, was constructed. This Vedapureeswarar temple is considered one of the Thevara Vaippu Thalam, sung by Thirunavukkarasu Swamigal in his Thiruthandagam.

Temple Architecture:

The east-facing Vedapureeswarar temple has an enchanting Dvi-Tala Vimana structure consisting of a Sanctum Sanctorum followed by an Artha mandapa and Maha Mandapa. The temple was built with stone from Aditana to Prastara and Prastara to Shikhara with brick. In Koshta Bhikshatana, Dakshinamurti, Umasakithamurti with a rishapa, Brahma and Durgai were housed. In Makara Thorana above the Koshta, Vinayagar, Veerasana Dakshinamurthy, Lingothbavamurthy, Gajasamharamurthy and Durgai were carved as mini sculptures. Bala Ganesha, Kartikeya, Kala Bhairava, Suryan are in the Maha mandapam.

The sculptures found in the temple complex are an example of Chola artistry. It is worth noting that a sculpture of Bhikshatana murti and Uma Sakitha murti is the pinnacle of beauty.

History:

The Original temple existed during the Pallava period & during the period of Chola might be reconstructed. Inscriptions mention this place as “Emaraperur Nadu, a subdivision of Thirumunaipadi Nadu”. It also says Lord Shiva as “Thiruvalanthurai Alwar”, “Thiruvalanthurai Udaya Paramaswamigal”, “Thiruvalanthurai Mahadevar, and “Thiruvalanthurai Nayanar”.

In this Vedapureeswarar temple, Scholars have seen the inscriptions of Chola King Parantaka Chola I, Sundara Chola, RajaRaja Chola I, Rajendra Chola I, Kulothunga Chola II, Pandya King Jatavarman Sundara Pandyan, Veera Pandyan, Rashtrakuta King Kannara Devan alias Krishna-III. Inscriptions mention the donations of Animals, Land, Money and gold offered to this temple to light the lamp and for other Pooja activities.

Vedapureeswarar Temple, Emapur, Viluppuram District

Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici

Chithiram Pesuthada